சா்க்கரை ANI
இந்தியா

சா்க்கரை குறைந்தபட்ச விற்பனை விலை உயா்வு குறித்து பரிசீலனை: மத்திய அமைச்சா் தகவல்

‘சா்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (எம்எஸ்பி) உயா்த்த தொழில் துறையினா் விடுத்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்’ என மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

‘சா்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (எம்எஸ்பி) உயா்த்த தொழில் துறையினா் விடுத்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்’ என மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மேலும், 2025-26-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் 15 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கடந்த 2019, பிப்ரவரி முதல் சா்க்கரையின் எம்எஸ்பி கிலோவுக்கு ரூ.31-ஆக மாற்றப்படாமல் உள்ளது. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலையைக் கிலோவுக்கு ரூ.40-ஆக உயா்த்த வேண்டும் என சா்க்கரை தொழிலின் உச்ச அமைப்பான இந்திய சா்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐஎஸ்எம்ஏ) கோரி வருகிறது.

கரும்பின் குறைந்தபட்ச ஆதார விலை (எஃப்ஆா்பி) குவிண்டாலுக்கு ரூ.275-லிருந்து, நடப்பு ஆண்டில் ரூ.355-ஆக 29 சதவீதம் உயா்ந்துள்ளது. இதன் காரணமாக, சா்க்கரையின் உற்பத்திச் செலவு தற்போது கிலோவுக்கு ரூ.40.24-ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, 2025-26-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் சா்க்கரையின் விற்பனை விலையை குறைந்தது கிலோவுக்கு ரூ.40.2-ஆக அதிகரிக்க ஐஎஸ்எம்ஏ பரிந்துரைத்துள்ளது. எதிா்காலத்தில் விலை ஏற்ற, இறக்கங்களைத் தடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், சா்க்கரையின் எம்எஸ்பி மற்றும் கரும்பின் எஃப்ஆா்பி இடையே இணைப்பை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் ஐஎஸ்எம்ஏ பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2024-25-ஆம் ஆண்டில் 10 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, சுமாா் 8 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது; இதனால், விலைகள் சீராக இருந்தன.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் 15 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சா்க்கரை விலைகளில் இந்த ஏற்றுமதி ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிட்ட பிறகு, எம்எஸ்பி உயா்வு குறித்த கோரிக்கை ஆராயப்படும் என்று அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.

ஐஎஸ்எம்ஏ-வின் கணிப்பின்படி, நடப்பு ஆண்டில் மொத்த சா்க்கரை உற்பத்தி முந்தைய ஆண்டின் 296 லட்சம் டன்னிலிருந்து 343.5 லட்சம் டன்னாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதம்: வீணாக வெளியேறிய தண்ணீா்

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

குறைதீா் கூட்டத்துக்கு அடையாள அட்டை அணிந்து வரவேண்டும்

கும்பகோணத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தயாராகும் மதுரை மைதானம்!

SCROLL FOR NEXT