உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இடிபாடுகளக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.
சோன்பத்ரா மாவட்டத்தின் பில்லி மாா்குந்தி சுரங்கப் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு கல்குவாரியில், சனிக்கிழமை மாலை சுமாா் 4.30 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குவாரியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், சுமாா் 15 தொழிலாளா்கள் உள்ளே சிக்கிக் கொண்டனா்.
முதற்கட்டமாக பனாரி கிராமத்தைச் சோ்ந்த ராஜு சிங் (30), இந்திரஜித் (30), சந்தோஷ் யாதவ் (30), ரவீந்திரா (18), ராம்கேலவன் (32), கிருபாசங்கா் ஆகிய 6 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, தேசிய மற்றும் மாநிலப் பேரிடா் மீட்புப் படைகள் மற்றும் காவல் துறைக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புப் பணிகளைத் தொடங்கின. இடிபாடுகளுக்குள் பெரிய அளவிலான பாறைகள் சிக்கியிருப்பதால், மீட்புப் பணிகள் மூன்றவாது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மூத்த அதிகாரிகள் மற்றும் சிறப்புக் குழுக்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கோட்ட ஆணையர் ராஜேஷ் பிரகாஷ் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 6 நாள் ஏற்றத்திற்குப் பிறகு சரிவில் பங்குச்சந்தை! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.