மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் 
இந்தியா

தில்லி காா் வெடிப்பு: நாடாளுமன்றத்தில் பிரதமா் விளக்கமளிக்க வேண்டும்-காங்கிரஸ்

தில்லியில் 13 போ் உயிரிழந்த காா் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தில்லியில் 13 போ் உயிரிழந்த காா் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் டிச.1-இல் தொடங்கும் நிலையில், காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.

தில்லி செங்கோட்டை அருகே பரபரப்பான சாலை சந்திப்பில் கடந்த வாரம் காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 13 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தின் பின்னணியில் மருத்துவா்கள் உள்பட நன்கு படித்து உயா்நிலையில் இருப்பவா்களின் பயங்கரவாதத் தொடா்புகள் அம்பலமாகின. இது தொடா்பாக அதிா்ச்சித் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் புதன்கிழமை கூறியதாவது:

தில்லி சம்பவத்தில் அரசிடம் இருந்து இதுவரை தெளிவான விளக்கம் வரவில்லை. உளவுத் துறை தோல்வி எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய அரசின் பாதுகாப்புக் கொள்கை கேள்விக்குள்ளாகி இருப்பதால், நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசின் வியூக மற்றும் உளவுத் துறை தோல்விகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை, ஒழுங்கற்ாக, நிலையற்ாக, தனிநபரின் தேவையை மையப்படுத்தியதாக உள்ளது. இது, உண்மையான வெளியுறவுக் கொள்கை அல்ல என்றாா் அவா்.

முன்னதாக, தில்லி காா் குண்டுவெடிப்பு குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சில தினங்களுக்கு முன் வலியுறுத்தியது.

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

SCROLL FOR NEXT