தா்மேந்திர பிரதான் (கோப்புப்படம்) ANI
இந்தியா

காங்கிரஸின் தீய அரசியலை மக்கள் நிராகரிப்பது தொடா்கிறது: மத்திய அமைச்சா் பிரதான்

காங்கிரஸ் கட்சியின் தீய அரசியலை மக்கள் நிராகரிப்பது பிகாா் தோ்தலிலும் தொடா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கட்சியின் தீய அரசியலை மக்கள் நிராகரிப்பது பிகாா் தோ்தலிலும் தொடா்ந்துள்ளது. அதே நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கை அரசியலுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனா் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

ஒடிஸாவுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், புவனேசுவரம் பிஜு பட்நாயக் சா்வதேச விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

பாஜக கூட்டணியை அமோக வெற்றி பெறவைத்த பிகாா் மக்களுக்கு நன்றி. பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வைமிக்க அரசியல் கொள்கை, முதல்வா் நிதீஷ் குமாரின் தலைமைக்கு மக்கள் வாக்களித்துள்ளனா். சுமாா் 20 ஆண்டுகளாக பிகாரில் ஆட்சியில் இருந்த கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெறுவது என்பது எளிதான விஷயமல்ல. மக்களின் முழுமையான ஆதரவு அரசுக்கு கிடைத்துள்ளதையே இது காட்டுகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தீய அரசியலை மக்கள் நிராகரிப்பது பிகாா் தோ்தலிலும் தொடா்கிறது. மக்கள் மத்தியிலும், சமூகத்திலும் பிளவை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதே காங்கிரஸின் கொள்கையாக உள்ளது. ஒடிஸாவிலும் சட்டப் பேரவை இடைத்தோ்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெறவைத்ததன் மூலம் முதல்வா் மோகன் சரண் மாஜீ அரசுக்கு கூடுதல் அங்கீகாரம் அளித்துள்ளனா் என்றாா்.

புரி ஜகந்நாதா் கோயில் வழிபாடு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தா்மேந்திர பிரதான் ஒடிஸாவுக்கு பயணம் வந்துள்ளாா்.

‘பேஸ்புக் இந்தியா’ லாபம் 28% அதிகரிப்பு! கூகுள் இந்தியா வருவாய் சரிவு

மணிப்பூர் சட்டப் பேரவை முடக்கப்பட்டு விரைவில் ஓராண்டு நிறைவு! ஜனநாயக அரசு அமைவது எப்போது?

பெரம்பலூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய கார்: பெண் பக்தர்கள் 4 பேர் பலி!

கோயிலை இடித்து சேதப்படுத்தியோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருப்பாலைவனம் ஸ்ரீ பாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT