கொல்கத்தா அருகே நடைபாதையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகே உள்ள சால்ட் லேக் பகுதியில் நடைப்பாதையில் வீசப்பட்ட பல ஆதார் அட்டைகளை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் மீட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் முகவரிகளைக் கொண்ட ஆதார் அட்டைகள், செயற்கைக்கோள் நகரத்தின் வயல்வெளிக்கு அருகிலுள்ள நடைபாதையில் கிடப்பதை அப்பகுதியினர் கவனித்துள்ளனர்.
உடன அவர்கள் இதுகுறித்து பிதான்நகர் வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
நடைப்பாதையில் 5-6 ஆதார் அட்டைகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மேலும் இந்த அட்டைகள் ஏன் அங்கு கொட்டப்பட்டன என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.