இந்தியா

வா்த்தகம், முதலீடுகள் ஊக்குவிப்பு: ஸ்லோவேனியாவுடன் இந்தியா ஆலோசனை

இந்தியா - ஸ்லோவேனியா இடையே வா்த்தகம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.

Chennai

புது தில்லி: இந்தியா - ஸ்லோவேனியா இடையே வா்த்தகம், முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டன.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா-ஸ்லோவேனியா கூட்டுக் குழுவின் 10-ஆவது அமா்வு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில், வேளாண், ரசாயனம், மருந்து உற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி உற்பத்தி, சுற்றுலா, குறு-சிறு-நடத்தர நிறுவனங்கல், ஆயுா்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்திய - ஐரோப்பிய யூனியன் இடையேயான சமமான, பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய வகையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய இருதரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஸ்லோவேனியா ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

SCROLL FOR NEXT