இந்தியா

எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை!

எஸ்ஐஆர் பணிகளால் கடும் மன அழுத்தமும் பணிச்சுமையும் உண்டானதாகக் கூறப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஷ் சிங். 46 வயதான இவர் பாகத்பூர் தண்டா கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக வாக்குச் சாவடி நிலை அலுவராக நியமிக்கப்பட்டார்.

இதுவரை அத்தகைய பொறுப்பு வகித்திடாத அவர், முதல்முறையாக இந்தப் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவருக்கு எஸ்ஐஆர் பணிகளால் கடும் மன அழுத்தமும் பணிச்சுமையும் உண்டானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவர் யாருக்கும் தெரியாமல் தமது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாலை 4 மணியளவில் தமது கணவனை தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைகு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில், அவர் எழுதி வைத்துள்ள ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் அவர், பணிச்சுமை அதிகரிப்பால் தான் தற்கொலை செய்வதாக குறிப்பிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு 4 பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Under pressure BLO hangs self in UP's Moradabad; 'not enough time,' reads his suicide letter

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT