குருகிராமில் செக்டாா் 8-இல் உள்ள ஒரு தொழில்துறை நிலையத்தில் 3 வயது ஆண் சிறுத்தை காணப்பட்டு அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக விரைந்த காவல் துறையினா் மற்றும் வனத்துறை அதிகாரிகள் 6 மணி நேர நடவடிக்கைக்கு பிறகு சிறுத்தையை பிடித்தனா்.
உணவு தேடி சிறுத்தை அப்பகுதிக்குள் அலைந்து திரிந்திருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் நம்புகின்றனா். தற்போது மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஆரவல்லி காட்டுக்குள் இந்த சிறுத்தை விடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மற்றொரு சம்பவத்தில், ஃபரீதாபாத்தில் உள்ள பதானா சௌக்கில் உள்ள சிசிடிவி காட்சிகளில் சிறுத்தை போன்ற ஒரு விலங்கு இருப்பது தெரிந்தது. இது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும், தேடுதலின் போது எந்த விலங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், வனத்துறைக்கு எந்த முறையான புகாரும் கிடைக்கவில்லை என்றும் போலீசாா் தெரிவித்தனா்.