மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டார்ஜிலிங் மாவட்டப் பகுதிகளில் பரவலாக சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.
இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மே.வங்கம் - சிக்கிம் இடையிலான முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள், உதவி தேவைப்படுவோர் + 91 33 2214 3526 | +91 33 2253 5185 | + 91 86979 81070 | 1070 | +91 91478 89078 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு டார்ஜிலிங் காவல் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.