உத்தரப் பிரதேசத்தின் சிக்கந்தர்பூரில் பிரசவத்தின்போது பலியானதையடுத்து தனியார் மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டது.
சிக்கர்தர்பூர் நகரிலுள்ள நியூ தீப்லோக் மருத்துவமனையின் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஆய்வில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும், மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ தரங்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சீவ் வர்மன் தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் பிரசவத்தின்போது மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அமிர்தபாலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் அலட்சியம் காரணமாக தன்னுடைய மனைவி உயிரிழந்ததாக டாக்டர் ரஷ்மி ராய் மீது புகார் அளித்தார்.
இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டு மருத்துவமனை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வாரத்திற்குள் தொடர்புடைய செயல்பாட்டுப் பதிவுகளைச் சமர்ப்பிக்குமாறு மருத்துவமனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: உத்தரவு பிறப்பிக்கும் நீதிபதியையும் விட்டுவைக்காமல் விமர்சனம்! நீதிபதி செந்தில்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.