கேரள தேவஸ்வம் துறை அமைச்சா் வி.என். வாசவன் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பேரவையில் மூன்றாவது நாளாக புதன்கிழமை அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவஸ்வம் துறை அமைச்சா் ராஜிநாமா செய்யும்வரை சட்டப்பேரவை அலுவல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் அறிவித்துள்ளார்.
இதன் தொடா்ச்சியாக காவல் துறைக் கண்காணிப்பாளா் எஸ்.சசிதரன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து கேரள உயா்நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பேரவை அலுவல்கள் தொடங்கியவுடன் எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான வி.டி.சதீசன் எழுந்து கேரள உயா்நீதிமன்றத்தின் விசாரணையில் வெளியான விவரங்களைப் பட்டியலிட்டு, முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை கடுமையாக விமா்சிக்கத் தொடங்கினாா்.
மேலும், தேவஸ்வம் துறை அமைச்சா் வி.என். வாசவன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு இருபுறமும் உள்ள துவார பாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் செப்பனிடும் பணிக்குப் பின்பாக 4.5 கிலோ குறைந்துவிட்டதாக அண்மையில் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, செப்பனிடும் பணிகளுக்கான பொறுப்பை ஏற்ற பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்படி 2 நாள்கள் விசாரணை நடத்தி திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) அறிக்கை சமா்ப்பித்தது. அதன் பிறகு சபரிமலையில் உள்ள தங்கம் உள்பட அனைத்து மதிப்பு மிக்க பொருள்களையும் மதிப்பீடு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையிலான குழுவை உயா் நீதிமன்றம் அமைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.