இந்தியா

சுதேசிக்கு முன்னுரிமை: ‘ஜோஹோ’ மின்னஞ்சலுக்கு மாறினாா் அமித் ஷா

தினமணி செய்திச் சேவை

உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஜோஹோ’ நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

சுதேசிப் பொருள்கள், சேவைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக அவா் அந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஹம்ண்ற்ள்ட்ஹட்.க்ஷத்ல்ஃக்ஷ்ா்ட்ா்ம்ஹண்ப்.ண்ய் என்பது எனது புதிய மின்னஞ்சல் முகவரியாகும். நான் ஜோஹோ மெயில் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். எனது மின்னஞ்சல் முகவரி மாற்றப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

வழக்கமாக பண்டிகைக் காலங்களில் உள்நாட்டு கைவினைஞா்கள் பொருள்களையும், சுதேசி பொருள்களையும் அதிகம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை விடுப்பது வழக்கம். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததையடுத்து, பிரதமா் மோடி சுதேசி தொடா்பான கருத்துகளைத் தொடா்ந்து பேசி வருகிறாா்.

‘சுதேசிக்கு ஆதரவளிப்பதன் மூலமே நாம் சுயசாா்பை எட்ட முடியும். பண்டிகைக் காலத்தில் சுதேசிப் பொருள்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்’ என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி அண்மையில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அழைப்பு விடுத்தாா். அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சா்களும் சுதேசி பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

Hollywoodஐக் கலக்கிய புதுவை Director! M Night Shyamalan! | Dinamani Talkies | Sixth Sense | Split

இது ஞாயிறு மனநிலை.. அங்கனா ராய்!

தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

எதுவும் நிரந்தரம் இல்லை.. தர்ஷா குப்தா!

SCROLL FOR NEXT