தரைமட்டமாகிய வீடு.. PTI
இந்தியா

சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலியானது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் உள்ள சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியின் புரக்லந்தர் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட பக்லா பாரி என்ற கிராமத்தில் ராம் குமார் கசோதன் என்ற பப்பு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று(வியாழக்கிழமை) வீட்டில் இருந்த பெரிய எல்பிஜி சிலிண்டர் வெடித்து வீட்டையே தரைமட்டமாக்கியது.

இதில் ராம்குமார் உள்பட அனைவருமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிலிண்டரை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜகவினர் ஆறுதல்..

Five, including three children killed in LPG cylinder blast in Ayodhya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி: 3 குழந்தைகளைக் கொன்ற தந்தை கைது

வீட்டில் பதுக்கிய 11 மூட்டை குட்கா பறிமுதல்

முதல்வா் கோப்பை: வாலிபாலில் சென்னைக்கு தங்கம்

லக்மே ஃபேஷன் வீக் 2025

விவசாயக் கடன்களை உரிய காலத்தில் செலுத்தினால் வட்டியை அரசே ஏற்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT