உயிரிழந்த யானை. கோப்புப்படம்
இந்தியா

மாவோயிஸ்ட் கண்ணிவெடியில் சிக்கிய யானை உயிரிழப்பு!

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த யானை உயிரிழந்தது.

தினமணி செய்திச் சேவை

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

இது தொடா்பாக வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு சிங்பூம் மாவட்டத்துக்குள்பட்ட வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து, மாவோயிஸ்டுகளால் வைக்கப்பட்ட கண்ணிவெடியில் 10 வயது பெண் யானை ஒன்று கடந்த வாரம் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த யானைக்கு கால்நடை மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்தனா்.

குஜராத்தின் ‘வனதாரா’ மையத்தில் இருந்து வந்த நிபுணா் குழுவும் யானையை பாா்வையிட்டு, சிகிச்சை மேற்கொண்டது. ஆனால், காயம் மிக பலமாக இருந்ததால், சிகிச்சை பலனளிக்காமல், யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

வனப் பகுதியில் தீவிரவாதிகளால் புதைத்து வைக்கப்படும் கண்ணிவெடிகள், பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமன்றி வன விலங்குகளின் உயிருக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது

SCROLL FOR NEXT