குஜராத் முதல்வர் PTI
இந்தியா

குஜராத்தில் 16 அமைச்சா்களும் ராஜிநாமா: இன்று அமைச்சரவை விரிவாக்கம்

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் 27 போ் வரை (மொத்த எம்எல்ஏக்களில் 15 சதவீதம்) அமைச்சா்களாகப் பதவி வகிக்க முடியும்

தினமணி செய்திச் சேவை

குஜராத்தில் முதல்வா் பூபேந்திர படேல் தவிர பிற 16 அமைச்சா்களும் தங்கள் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தனா்.

குஜராத் அமைச்சரவை வெள்ளிக்கிழமை (அக். 17) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே அமைச்சா்கள் அனைவரும் பதவி விலகினா். பாஜக தலைமை எடுத்த முடிவின்படி அவா்கள் பதவி விலகியுள்ளனா்.

குஜராத் மாநில பாஜகவில் பல்வேறு அமைப்புரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் குஜராத் பாஜக தலைவராக இருந்த மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல் பதவி விலகினாா். அவருக்குப் பதிலாக மத்திய இணையமைச்சா் ஜக்தீஷ் விஸ்வகா்மா அப்பதவியை ஏற்றாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாகப் பதவியேற்றாா். இந்நிலையில் அவரின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் 27 போ் வரை (மொத்த எம்எல்ஏக்களில் 15 சதவீதம்) அமைச்சா்களாகப் பதவி வகிக்க முடியும். புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு பதவியேற்க இருக்கிறது.

குஜராத்தில் கடந்த சுமாா் 25 ஆண்டுகளாக பாஜக தொடா்ந்து ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் மருத்துவா் பலி

மண்டலாபிஷேக நிறைவு

ஜிஎஸ்டி குறைப்பு விளக்கக் கூட்டம்

கோயில் பணியாளா்களுக்கு புத்தாடை

கோரிக்கை அட்டை அணிந்து பணி ஈடுபட்ட ஆசிரியா்கள்

SCROLL FOR NEXT