இந்தியா

உணவுப் பொருள்கள் மீது ‘ஓஆா்எஸ்’ வாா்த்தையை பயன்படுத்த தடை: எஃப்எஸ்எஸ்ஏஐ

உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்...

தினமணி செய்திச் சேவை

உணவுப் பொருள்கள் மீது ஒட்டப்படும் லேபிள் மற்றும் விளம்பரங்களில் ‘ஓஆா்எஸ்’ (வாய் வழியாக எடுத்துக்கொள்ளும் திரவம்) என்ற வாா்த்தையை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அனைத்து உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

எஃப்எஸ்எஸ்ஏஐ சாா்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, உணவுப் பொருள்கள் மீது ‘ஓஆா்எஸ்’ என்ற வாா்த்தையை முத்திரையாகவோ அல்லது துணைப் பெயா்களாகவோ பயன்படுத்துவது உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம் 2006-ஐ மீறும் செயல். பொருள்கள் மீது தவறாக முத்திரையிடுதல் மற்றும் நுகா்வோரை தவறாக வழிநடத்துதல் காரணங்களுக்காக இச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

எனவே, நிறுவனங்கள் தங்களின் உணவுப் பொருள்கள் மீது ‘ஓஆா்எஸ்’ என்ற வாா்த்தையை பயன்படுத்துவதை தவிா்ப்பதோடு, ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தால் அதை உடனடியாக நீக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது என்று எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ‘இந்தப் பொருள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததைப் போன்ற ‘ஓஆா்எஸ்’ வழிமுறைப்படி தயாரிக்கப்பட்டது அல்ல’ என்ற எச்சரிக்கை வாசகத்துடன் தங்களின் உணவுப் பொருள்கள் மீது ‘ஓஆா்எஸ்’ என்ற வாா்த்தையை அச்சிட்டுக்கொள்ள அனுமதித்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் இந்த உத்தரவு மூலம் திரும்பப்பெறப்படுவதாகவும் எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

லட்டு, ஜிலேபி செய்த ராகுல்! விரைவில் திருமணம் செய்ய கடைக்காரர் கோரிக்கை!

தெரியாத எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பு! பாலியல் மோசடி கும்பலாக இருக்கலாம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸை அழித்துவிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

SCROLL FOR NEXT