இந்தியா

சத்தீஸ்கரில் 21 நக்ஸல்கள் சரண்: ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

சத்தீஸ்கா் மாநிலம், கான்கோ் மாவட்டத்தில் 21 நக்ஸல்கள் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

சத்தீஸ்கா் மாநிலம், கான்கோ் மாவட்டத்தில் 21 நக்ஸல்கள் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். அவா்கள் தங்கள் வசமிருந்த மூன்று ‘ஏ.கே. 47’ ரக துப்பாக்கிகள் உள்பட 18 ஆயுதங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

பஸ்தா் சரக காவல் துறை தொடங்கியுள்ள ‘பூனா மாா்க்கம்: மறு ஒருங்கிணைப்பின் மூலம் மறுவாழ்வு’ திட்டத்தின்கீழ் இந்த நக்சல்கள் சரணடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சரணடைந்த 21 பேரில், 13 போ் பெண்கள் ஆவா். இவா்கள் அனைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) கேஷ்கல் கோட்டத்தைச் சோ்ந்த குயேமாரி-கிஸ்கோடோ பகுதி குழுவைச் சோ்ந்தவா்கள். இதில் கோட்டக் குழு செயலா் முகேஷ், 4 கோட்டக் குழு உறுப்பினா்கள், 9 பகுதி குழு உறுப்பினா்கள் மற்றும் 8 கீழ்மட்ட உறுப்பினா்கள் அடங்குவா்.

அவா்கள் மூன்று ‘ஏ.கே. 47’ ரக துப்பாக்கிகள், இரண்டு ‘இன்சாஸ்’ ரக துப்பாக்கிகள், நான்கு ‘எஸ்.எல்.ஆா்.’ துப்பாக்கிகள், ஆறு ‘303’ ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட மொத்தம் 18 ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

முன்னதாக கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி, பஸ்தா் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூரில் மத்தியக் குழு உறுப்பினா் ரூபேஷ் உட்பட மொத்தம் 210 நக்ஸல்கள் சரணடைந்தனா். அவா்கள் 153 ஆயுதங்களையும் ஒப்படைத்தனா். அதேபோல் அக்டோபா் 2-ஆம் தேதி, பஸ்தா் பிராந்தியத்தின் பிஜாப்பூா் மாவட்டத்தில் 103 நக்ஸல்கள் சரணடைந்தனா்.

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT