செயற்கை யமுனை ஆம் ஆத்மி எக்ஸ் பக்கம்
இந்தியா

பிரதமர் மோடி புனித நீராட செயற்கை யமுனை! கட்சிகள் விமர்சனம்

பிரதமர் மோடி நீராட செயற்கையாக யமுனை உருவாக்கப்பட்டிருப்பதாக கட்சிகள் விமர்சனம்

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, யமுனையில் இன்று நீராடவிருக்கும் நிலையில், அவருக்காக செயற்கையாக ஒரு குளம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் விமர்சனம் செய்திருக்கிறது.

மாசடைந்த யமுனை நதியில் ஒட்டுமொத்த மக்களும் நீராட அனுமதிக்கப்படும் நிலையில் பாஜகவினர், பிரதமர் நரேந்திர மோடி நீராடுவதற்காக மட்டும் தனியாக சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்பி செயற்கையாக ஒரு யமுனை நதியை உருவாக்கியிருக்கியிருப்பதாகத் தகவல்கள் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யமுனை நதிக்கரையில் வாசுதேவர் துறைமுகம் அருகே சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்பி, அதில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நீராட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதனை மேற்கோள்காட்டி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், சத் பூஜை குறித்து மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் பாஜக கேலி செய்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

வட இந்திய மாநிலங்களில் சத் அல்லது சாத் என்று அழைக்கப்படும் பூஜை நாளில், மக்கள் அனைவரும் நீர்நிலைகளில் புனித நீராடி, சூரியனை வழிபடுவது வழக்கம்.

பிகாரில் நவம்பர் மாதம் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநில மக்களுடன் சேர்ந்து சத் பூஜையில் பங்கேற்கவிருக்கிறார் பிரதமர் மோடி. அதன்படி, இன்று அவர் யமுனை நதியில் நீராடுகிறார். ஆனால், அவர் நீராட, யமுனை நதியில் ஏற்பாடு செய்யாமல், யமுனைக்கு அருகே வெட்டப்பட்ட புதிய நீர்நிலையில்தான் பிரதமர் மோடி இன்று நீராடுகிறார் என்றும், இதற்காக அந்த நீர்நிலை முழுக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் லாரிகளில் கொண்டு வந்து நிரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது சமூக வலைத்தளங்களில் பரவியிருப்பதால் பேசுபொருளாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

92 வயதில் உலகின் வயது முதிர்ந்த அதிபராகும் பால் பியா..!

மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் சீமான் மரியாதை!

ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்வு; நிஃப்டி 25,966-ல் நிறைவு!

தங்கத்தில் சிலையெடுத்து... ஷீஃபா கிலானி!

அன்னம் தொடரில் பிக் பாஸ் பிரபலம்!

SCROLL FOR NEXT