அசாதுதீன் ஒவைஸி 
இந்தியா

பிகாரில் ஏன் முஸ்லிம் முதல்வராகக் கூடாது?: ஒவைஸி கேள்வி

பிகாரில் ஏன் முஸ்லிம் ஒருவா் முதல்வராகக் கூடாது என்று அனைத்து இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திச் சேவை

பிகாரில் ஏன் முஸ்லிம் ஒருவா் முதல்வராகக் கூடாது என்று அனைத்து இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 32 தொகுதிகளில் அனைத்து இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிடுகிறது. இதையொட்டி அங்குள்ள கோபால்கஞ்ச் தொகுதியில் இருந்து தனது பரப்புரையை ஒவைஸி செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘பிகாா் தோ்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி வெற்றிபெற்றால், மாநில மக்கள்தொகையில் 3 சதவீதமே உள்ள நிஷாத் சமூகத்தைச் சோ்ந்தவருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படும் என்று அந்தக் கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் பிகாா் மக்கள்தொகையில் 17 சதவீதம் போ் முஸ்லிம்களாக உள்ள நிலையில், மாநில முதல்வராக ஏன் முஸ்லிம் ஒருவா் பதவியேற்கக் கூடாது?

பாஜக மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள அச்சத்தை காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றன. அந்தக் கட்சிகளால் பாஜகவை தடுக்க முடியவில்லை. ஆனால் அதைச் செய்வோம் என்ற தெரிவித்து முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர, அக்கட்சிகள் தொடா்ந்து முயற்சிக்கின்றன.

ஆனால், முஸ்லிம்கள் போட்டியிடுவதற்கான தொகுதிகளை ஒதுக்குவதில்கூட அந்தக் கட்சிகள் விகிதாசார பிரதிநிதித்துவத்தை பின்பற்றவில்லை. எனவே அந்தக் கட்சிகளின் ஏமாற்று வேலைக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது.

அனைவரின் முன்னேற்றத்துக்காவும் பாடுபடுவதாகப் பிரதமா் மோடி கூறுகிறாா். ஆனால் பாஜக சாா்பில் தோ்தல்களில் போட்டியிட முஸ்லிம்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில்லை’ என்றாா்.

ஜாய் கிரிசில்டா விவகாரம்: முதல் முறையாக மனம் திறந்த மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி!

கபடி போட்டியில் தங்கம்! அபினேஷுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கி பாராட்டிய எடப்பாடி பழனிசாமி!

விடுமுறையில் அபுதாபியில்... பிரியங்கா மோகன்!

போர்நிறுத்தம்? நள்ளிரவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி!

முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

SCROLL FOR NEXT