மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கியது. அசாம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களின் மீது வன்முறை நடத்தப்படுவதாக மேற்கு வங்க அரசு குற்றம்சாட்டியது.
அந்த விவகாரம் குறித்த சிறப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அமளியில் ஈடுபட்ட அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடந்த செப்.2 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டப்பேரவையில் இன்று (செப்.4) அவரது உரையைத் தொடங்கியபோது, எதிர்க்கட்சியான பாஜகவின் கொறடா சங்கர் கோஷ் உள்ளிட்டோர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சிறப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கர் கோஷ் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களான அக்னிமித்ரா பால், மிஹிர் சோசுவாமி, அசோக் டிண்டா மற்றும் பன்கிம் கோஷ் ஆகியோரும் சபாநாயகரால் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.