குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.
மாதிரி வாக்குப்பதிவின்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் பற்றி விளக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள சம்விதான் சதான் மத்திய அரங்கில் நாளை பகல் 2.30 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.