உத்தரப் பிரதேசத்தில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், காக் சராய் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரின் மனைவி ரேஷ்மா (25) வியாழக்கிழமை பிரசவ வலியால் பிலிபிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது அவர் இறந்த நிலையில் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு வெளியே உள்ள பூங்காவின் பெஞ்சில் உடலுடன் குடும்பத்தினர் இரவு அமர்ந்திருந்தனர். அப்போது, தெருநாய் ஒன்று அதை தூக்கிக்கொண்டு ஓடியது. உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் நாயை துரத்திச் சென்றன்ர். பின்னர் உடலை சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள புதர்களில் போட்டுவிட்டு தெரு நாய் ஓடியது.
இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. மேலும் அங்கு தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன என்று உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவத்தை மகளிர் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேஷ் குமார் உறுதிப்படுத்தினார்.
அதேசமயம் இது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் நடக்கவில்லை என்றும், ஏனெனில் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து, அவர்கள் அதை வெளியே உள்ள பூங்காவிற்கு கொண்டு சென்றுவிட்டனர் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்கீதா அனேஜா கருத்து கூற மறுத்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.