தில்லியில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.
அந்த வகையில் நேற்று தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் மற்றும் நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி என தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) தில்லியில் பிரபல தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
'தாஜ் ஹோட்டலில் உள்ள விருந்தினர்கள் அனைவரும் கடவுளிடம் அனுப்பப்படுவார்கள்' என்ற வாசகத்துடன் இ-மெயில் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி எனத் தெரிய வந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.