பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு 75 லட்சம் மரக்கன்றுகளை நட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தேர்தல் முறையில் செயல்படுத்தப்படும் என வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சத்யபிரத் சாஹு தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக திங்கள்கிழமை மாலை முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மரக்கன்றுகள் நடப்படும். இந்தத் திட்டம் தேர்தல் முறையில் கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார்.
அதன்படி, வனத்துறை 15 லட்சம் மரக்கன்றுகளும், பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் 34 லட்சம் மரக்கன்றுகளும், தொழில்துறை சார்பில் 15 லட்சம் மரக்கன்றுகளும், வேளாண் துறையின்படி 23 லட்சம் மரக்கன்றுகள் நடவுள்ளது.
மேலும், மாநிலத்தில் உள்ள மத்திய ஆயுதப்படைகள் 2.2 லட்சம் மரக்கன்றுகளும், காவல்துறை சார்பில் 3 லட்சம் மரக்கன்றுகளும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 2 லட்சம் மரக்கன்றுகளையும் நடவுள்ளதாக அவர் கூறினார்.
மரக்கன்று நடும் பணியில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்கள், 15 லட்சம் பள்ள மாணவர்கள், 76 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள், 17,500 பாதுகாப்பு சங்கங்கள், 1 லட்சம் தேசிய நலத்திட்ட உதவியாளர்கள், 16,500 மதர் இந்தியா தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் என மொத்தம் 25 லட்சம் பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று சாஹு கூறினார்.
மரக்கன்றுகளை நடும்போது அனைவரும் சுயபடம் (செல்ஃபி) எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுமாறு முதல்வர் மோகன் சரண் மாஜி வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.