மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கவலை தெரிவித்ததோடு, இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநில, மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 251.4 மி.மீ. மழை பதிவானது. கொல்கத்தாவில் 1986-க்கு பிறகு (259.5) பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து காங்கிரஸ் எம்பி கவலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் பதிவில்,
கொல்கத்தாவில் மழையின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும், இயல்புநிலையை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேக வெடிப்புக்குப் பிறகு மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தார். இதுபோன்ற மழையை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், காவல்துறை மற்றும் தலைமைச் செயலாளருடன் தொடர்பில் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.
இதையும் படிக்க: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.