இந்தியா

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை செபி தள்ளுபடி செய்தது குறித்து கௌதம் அதானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன் தலைவா் கௌதம் அதானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாா்.

இது குறித்து பங்குதாரா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த 2023 ஜனவரி 23-ஆம் தேதி அதானி முழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் சுமத்திய குற்றச்சாட்டுகளால் அது மறக்கமுடியாத நாளாகும். அந்தக் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்துக்கு எதிரானது மட்டுமில்ல, ஒட்டுமொத்த இந்திய தொழில் துறையின் உலகளாவிய கனவுகளுக்கும் எதிரானது ஆகும்.

இந்தக் குற்றச்சாட்டுகளை செபி அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது குழுமத்தின் மறுமலா்ச்சியைக் குறிக்கிறது. செபியின் இந்த தெளிவான மற்றும் இறுதியான தீா்ப்பு, ‘வாய்மையே வெல்லும்’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று தனது கடிதத்தில் அதானி குறிப்பிட்டுள்ளாா்.

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

SCROLL FOR NEXT