மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக செப். 26 (நாளை) ஒருநாள் பயணமாக பிகார் செல்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
பிகார் காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கான் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஏஐசிசி பொதுச் செயலாளர் சையத் நசீர் உசேன், பிபிசிசி தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரியங்கா காந்தி நாளை நண்பகல் பாட்னாவில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பிறகு 3 மணியளவில் மோதிஹரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்தில் பிரியங்காவின் இரண்டாவது மாநில வருகை இதுவாகும்.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம் வாக்காளர் அதிகார யாத்திரையில் கலந்துகொண்டார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் அவரது சகோதரருமான ராகுல் காந்தி பதினைந்து நாள்களில் 25 மாவட்டங்களில் 1,300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.