மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கோப்புப் படம்
இந்தியா

ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது எங்கள் நிலைப்பாடு! மத்திய அமைச்சர் பதில்!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது ஏன்? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம்

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க உலக நாடுகள் தடை விதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

ரஷியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்று இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், ``இந்தியா, ரஷிய எண்ணெய் மட்டுமல்ல; எந்தவொரு நாட்டிலிருந்து எண்ணெய் வாங்கலாம். அது எங்கள் நிலைப்பாடு.

இதுவரையில், ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. நாங்கள் ரஷிய எண்ணெயை தொடர்ந்து வாங்குவோம். கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டால், அது உலகம் முழுவதும் கடுமையான விளைவுகளைக் கொடுக்கும். அதனால்தான், ரஷிய கச்சா எண்ணெய்க்கு உலக நாடுகள் தடை விதிக்கவில்லை.

ஈரான் மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்க சர்வதேச தடை இருக்கிறது. சர்வதேச சமூகத்தின் ஒரு பொறுப்பான உறுப்பினராக, இந்தியா அதனை மதித்து, தடைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால், அந்த நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

இருப்பினும், ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில்தான், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து மும்பையில் பொருளாதார வல்லுநர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசினார்.

இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட புது அறிக்கை!

No Sanctions On Purchasing Crude Oil From Russia: Union MInister Hardeep Puri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி என் காட்கில் ஜுவல்லர்ஸ் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

தில்லி சம்பவம்: தேடப்பட்டு வந்த சிவப்பு கார் சிக்கியது!

ஈ.எஃப்.சி இந்தியா 2-வது காலாண்டு லாபம் 55% உயர்வு!

ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.8.57 கோடி!

2026 தேர்தலில் ஸ்டாலின்தான் முதல்வர்; பாஜக எதிரணி! - அப்பாவு | செய்திகள்: சில வரிகளில் | 12.11.25

SCROLL FOR NEXT