விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது, இதிலும் இந்தியா அணி வெற்றிப் பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”விளையாட்டு திடலிலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது. முடிவு ஒன்றுதான், இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கோப்பைத் தொடரில் 9-வது முறையாக கோப்பையை வென்று, கோப்பையைத் தக்கவைத்துள்ளது.
மேலும், இந்தத் தொடரில் லீக், சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டி என பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணியே வெற்றி வாகையை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கரூர் பலி 41-ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.