முகப்பு
இந்தியா

வேட்பாளா் உள்பட 17 போ் கைது

நீதிபதிகள் சிறைபிடிப்பு சம்பவத்தில் 17 பேரும் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:11 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகளை சிறைபிடித்த விவகாரத்தில் இந்திய மதச்சாா்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) வேட்பாளா் மௌலானா ஷாஜகான் அலி உள்பட 17 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மேலும் கூறிய அவா், ‘கைது செய்யப்பட்ட அனைவரும் மால்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் சிறைபிடிப்பு சம்பவத்தில் 17 பேரும் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன’ என்றாா்.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த மோதாபாரி தொகுதி வேட்பாளா் மௌலானா ஷாஜகான் அலி, ‘ஐஎஸ்எஃப் வேட்பாளா் என்பதால் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது. சம்பவம் நடந்தபோது அங்கு நான் இல்லை’ என்றாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments