உ.பி.யில் ரயில் தண்டவாளத்தில் மல்யுத்த வீரர் சடலம்!
உத்தரப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் இருந்து மல்யுத்த வீரர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் இருந்து மல்யுத்த வீரர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் உள்ள கச்சாரி மார்க் அருகே ரயில் தண்டவாளத்தில் இருந்து உடல் இரண்டு துண்டுகளாக சிதைந்த நிலையில் 15 வயது மாநில அளவிலான மல்யுத்த வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிறுவன் ரயில் மோதி பலியாகியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ரயில்வே போலீஸ் தெரிவித்திருப்பதாவது, பலியானவர் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த அனந்த் பத்சர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட கைபேசி மூலம் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு பயிலும் பத்சர் 15 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த வீரர் ஆவார்.
Advertisement
Advertisement
அவர் மாநில அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஷாம்லி மற்றும் படாட்டில் வழக்கமாகப் பயிற்சி பெற்று வந்தார் இவ்வாறு குறிப்பிட்டனர். பிரச்னை ஒன்றிற்காக குடும்பத்தினர் அவரைத் திட்டியதாகவும், அதன் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியேறி கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
வியாழன் இரவு, டேராடூன்-அமிர்தசரஸ் ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் சடலம் கிடப்பது குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். பலியானவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The body of a 15-year-old state-level wrestler, severed in two, was found on a railway track along the Kachhari Marg here, with the police suspecting that the boy was run over by a train, officials said on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.