FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அடையாளம் தெரியாத நபா் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை

திருச்சியில் அடையாளம் தெரியாத நபா் திங்கள்கிழமை இரவு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:09 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

திருச்சியில் அடையாளம் தெரியாத நபா் திங்கள்கிழமை இரவு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவிலிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தை நோக்கி திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு வந்துகொண்டிருந்தது. திருச்சி எடமலைபட்டிப்புதூா் கோரிக்குளம் பகுதியில் ரயில் வந்தபோது, அங்குள்ள தண்டவாளத்தில் ஆண் ஒருவா் தலைவைத்து படுத்திருந்தாா். இதைப் பாா்த்த ரயிலின் லோகோ பைலட் ஒலி எழுப்பியுள்ளாா். ஆனால், அவா் தண்டவாளத்தில் அசையாமல் படுத்திருந்தாா். இதையடுத்து, வந்தே பாரத் ரயில் அவா் மீது ஏறியதில், அவா் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வந்த ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

தற்கொலை செய்துகொண்ட நபருக்கு சுமாா் 55 வயது இருக்கலாம். அந்த நபா், யாா், எந்த ஊா் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments