முகப்பு
இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

Updated On : 18 ஏப்ரல் 2026, 4:30 pm IST
அகவிலைப்படி உயர்வு - சித்திரிப்பு
பகிர்:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள், நீண்டகாலமாக தங்களின் ஊதிய கட்டமைப்பில் திருத்தம்கோரி வந்தனர். இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்வகையில், தில்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி (Dearness Allowance - டியர்னெஸ் அலோவென்ஸ்) உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வூதியதார்களுக்கும் அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், ஓய்வூதியதார்களின் ஓய்வூதியமும் அதிகரிக்க உள்ளது.

Advertisement

Advertisement

இந்த அறிவிப்பு, தற்போதைய 58 சதவிகித அகவிலைப்படி விகிதத்தை 60 சதவிகிதமாக உயர்த்துகிறது.

அகவிலைப்படி, பொதுவாக பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை, விலைவாசி உயர்வின் தாக்கத்தை சரிசெய்யும் பொருட்டு, அரசு ஊழியர்களின் வருமானத்தை பொருளாதார நிலைக்கேற்ப சீரமைக்கப்படுகிறது.

அடிப்படை ஊதியம், நீண்ட காலத்துக்கு மாறாமலிருக்கும் நிலையில், அகவிலைப்படி உயர்வு மூலம் வருமான உயர்வு கிடைக்கிறது. இந்த வருமான உயர்வு மூலம் விலைவாசி உயர்வின் தாக்கத்தை ஈடுகட்ட முடியும்.

summary

Union Cabinet approves 2% increase in Dearness Allowance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.