நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள்: மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆய்வு
ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறு தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி.வி. சோமநாதன் ஆய்வு குறித்து...
புது தில்லி: ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறு தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி.வி. சோமநாதன் ஆய்வு செய்தார்.
தேசியத் தேர்வுகள் முகமையின் (என்டிஏ) தலைமை இயக்குநர் அபிஷேக் சிங்குடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து மறுதேர்வை எந்தவிரத பிரச்னையும் இன்றி, சுமூகமாகவும், வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு தேவையான ஒருங்கிணைப்புப் பணிகளை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
Advertisement
Advertisement
நீட் மறுதேர்வை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக சோமநாதன் தெரிவித்தார்.
மறுதேர்வின் நம்பகத்தன்மையையோ அல்லது அது சுமூகமாக நடைபெறுவதை சிதைக்கவோ, சீர்குலைக்கவோ அல்லது அதில் முறைகேடு செய்யவோ முயற்சிக்கும் எவர் மீதும் சட்டப்படடி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
முன்னதாக, ஜூன் 1 ஆம் தேதி மத்திய அரசு மற்றும் தொடர்புடைய முகமைகளின் செயலாளர்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து சோமநாதன் விரிவான ஆய்வு செய்திருந்தார்.
நீட் மறுதேர்வுச் செயல்முறையின் நம்பகத்தன்மையையும் நேர்மையையும் பாதுகாப்பதை முதன்மை நோக்கங்களுக்காகவே இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Cabinet Secretary Dr T V Somanathan has reviewed the preparedness for the NEET re-examination in a meeting with the Director General, National Testing Agency (NTA), Abhishek Singh.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.