மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் தீ விபத்து!
மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி...
தில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய தில்லியில் ஐடிஓ பகுதியில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சக வளாகத்தில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி (எஸ்பிஏ) அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தில்லி தீயணைப்புத் துறைக்கு காலை 9.37 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், 8 வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
காலை நேரம் என்பதால் இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, காயமோ ஏற்படவில்லை.
இதுவரை தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தில்லி காவல்துறையினரும், தீயணைப்புத் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் குளறுபடி என அடுத்தடுத்து பிரச்னைகளில் மத்திய கல்வி அமைச்சகம் சிக்கி வரும் நிலையில், இந்த தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Fire at the Union Ministry of Education building!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.