முகப்பு
இந்தியா

இத்தாலியில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக்கொலை

இத்தாலியில் குருத்வாராவிலிருந்து வெளியேறிய 2 இந்தியர்கள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 2:54 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

இத்தாலியில் குருத்வாராவிலிருந்து வெளியேறிய 2 இந்தியர்கள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இத்தாலியின் பெர்காமோ மாகாணத்தில் உள்ள கோவோ பகுதியில் வைசாகி திருவிழாவையொட்டி வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தப்படும் கிடங்கு ஒன்றில் இருந்து வெளியே வந்த 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நகரின் தொழில்துறை பகுதியில் உள்ள குருத்வாரா மாதா சாஹிப் கௌர் ஜி முன்பாக உள்ள சதுக்கத்தில் நிகழ்ந்ததாக 'லா சிசிலியா' செய்தித்தாள் தெரிவித்துள்ளது. பலியானவர்கள் கோவோ பகுதியில் வசிக்கும் ரகிந்தர் சிங் (48), அக்னாடெல்லோவைச் சேர்ந்த குர்மித் சிங் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தாக்குதல் நடத்தியவர், இருவரையும் நெருங்கி வந்து சுட்டுவிட்டு பின்னர் காரில் தப்பிச் சென்றுள்ளார். சம்பவ இடத்திலிருந்து சுமார் 10 தோட்டா உறைகள் மீட்கப்பட்டுள்ளன. இது திடீர் மோதலால் ஏற்பட்ட கொலை அல்ல என்றும் திட்டமிடப்பட்ட படுகொலை என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அந்த குருத்வாராவிற்கு அடிக்கடி வரும் மற்றுமொரு இந்தியர் என்று நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் 3ஆவது நபர் ஒருவர் காயமின்றித் தப்பியதாகவும் அவர் கூறினார்.

சனிக்கிழமை உள்ளூர் அமைப்புகளின் பங்கேற்புடன் வைசாகி திருவிழா அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

summary

Two Indian men have been shot dead in Italy's Covo in Bergamo province just as they were leaving a warehouse used as a place of worship during a gathering for Vaisakhi festival, local media reported on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.