இணைய விளையாட்டு விதிகள் மே.1 முதல் அமல்: மின்னணு அமைச்சகம் அறிவிப்பு
இணைய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் மே 1-ஆம் தேதி முதல் அமலாவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இணைய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் மே 1-ஆம் தேதி முதல் அமலாவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கான விதிகளை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.
இதுதொடா்பாக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது: ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் தவிர பிற இணைய விளையாட்டுகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த விளையாட்டுகளை விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் பதிவுசெய்யும் விதமாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
Advertisement
ஒரு விளையாட்டை இணைய சூதாட்ட விளையாட்டு அல்லது இணைய சமூக விளையாட்டு என விண்ணப்பிக்க நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.
பயனா் அம்சங்கள் குறித்து விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இணைய சூதாட்ட விளையாட்டுகளுக்கு இந்தச் சட்டம் தடை விதிக்கும் அதேவேளையில் மின்னணு விளையாட்டுகள் மற்றும் இணைய சமூக விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது என்றாா்.
கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தச் சட்டத்தின் மீது மத்திய மின்னணு அமைச்சகம் கருத்து கேட்ட நிலையில் தற்போது இணைய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்துக்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை மே 1-ஆம் தேதி முதல் அமலாகின்றன.