தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் தங்கியிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் தங்கியிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிகட்ட தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது. இதையொட்டி ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெஹாலா புர்பா மற்றும் பெஹாலா பஸ்சிம் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு திறந்தவெளி வாகனத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாலைவலமாக சென்றார்.
Advertisement
Advertisement
அப்போது, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜக ஆதரவாளர்கள் கையசைத்தும் மலர் தூவியும் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அங்கு கூடியிருந்தவர்கள் முன் உரையாற்றிய அமித் ஷா, சகோதர சகோதரிகளே, 29ஆம் தேதி சென்று வாக்களியுங்கள். குண்டர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தாலும், மத்திய படைகள் ஏழு நாள்களுக்கு இங்கேயே தங்கியிருக்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன்.
எனவே, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.