மே 9-ல் மேற்கு வங்கத்தில் பாஜக அரசு பதவியேற்பு! பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு!
மேற்கு வங்கத்தில் பாஜக அரசு வரும் மே 9 ஆம் தேதி பொறுப்பேற்பது குறித்து...
மேற்கு வங்கத்தில் வரும் மே 9 ஆம் தேதி பாஜக அரசு பொறுப்பேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 207 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. மேலும், திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2 மற்றும் பிற கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் வரும் மே 9 ஆம் தேதி பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதாகவும்; இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும் பாஜக மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா இன்று (மே 7) தெரிவித்துள்ளார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிய பாஜக அமைச்சரவை குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களை பாஜகவினர் சூறையாடி வன்முறையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.