மாணவர்களுக்கு ஓஆர்எஸ், தடையற்ற மின்சாரம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!
தில்லி முதல்வர் வெப்ப அலைத் திட்டத்தை அறிவித்தது குறித்து...
மாணவர்களுக்கு ஓஆர்எஸ், தடையற்ற மின்சாரம் போன்ற வெப்ப அலைத் திட்டத்தை தில்லி முதல்வர் ரேகா குப்தா திங்கள்கிழமை (ஏப்.27) அறிவித்துள்ளார்.
அனைத்துத் துறைகளுடனும் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஓஆர்எஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், கட்டுமானத் தொழிலாளர் போன்ற அனைத்து வெளிப்பணித் தொழிலாளர்களும் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை வேலையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தொழிலாளர் துறையிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
Advertisement
Advertisement
மின்சாரம் மற்றும் தண்ணீர் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து டிடிசி பேருந்துகளிலும் பயணிகள் அருந்துவதற்காக குடிநீரை வைக்குமாறு, போக்குவரத்துத் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
தற்போது ஏற்படக்கூடிய வெப்ப அலையைச் சமாளிக்க தில்லி அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும், மக்கள் எந்தவித சிரமங்களையும் சந்திக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
Delhi Chief Minister Rekha Gupta announced a heatwave action plan for students including provisions such as ORS and uninterrupted power supply on Monday (April 27).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.