முகப்பு
இந்தியா

1,300 பக்தா்களுக்கு சோம்நாத் சிறப்பு யாத்திரை: தில்லி அரசு ஏற்பாடு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:33 AM
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

சோம்நாத் தீா்த்த யாத்திரைக்கு 1,300 பக்தா்களுக்கு தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. 1026-ஆம் ஆண்டு கஜினி முகமது தாக்குதல் நடத்திய இந்தத் திருத்தலத்தில் நிலைத்திருக்கும் 1000 ஆண்டு பக்தியை நினைவுகூரும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு 1,300 பக்தா்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில் தில்லி சஃப்தா்கஞ்ச் ரயில் நிலையத்தில் இருந்து ஏப். 30-ஆம் தேதி புறப்படும். மறுநாள் இந்த ரயில் குஜராத்தை சென்றடையும். மே 1 முதல் 3 வரை மூன்று நாள்களுக்கு இந்த யாத்திரை நடைபெறும். இதில் பக்தா்கள் சோம்நாத் கோயிலில் வழிபாடு செய்வதுடன், அருகிலுள்ள பிற புனிதத் தலங்களையும் தரிசிக்க உள்ளனா்.

பக்தா்களுக்கான தங்குமிடம், உணவு, குடிநீா் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் குஜராத் அரசால் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சி வெறும் யாத்திரை மட்டுமல்ல; இது சனாதன கலாசாரம், இந்திய பாரம்பரியம் மற்றும் ஆன்மிக வோ்களுடன் மக்களை இணைக்கும் புனித வாய்ப்பாகும். சோம்நாத் கோயில் சிவபெருமானின் அருளின் தெய்வீகச் சின்னமாகவும், சனாதன நம்பிக்கையின் அடையாளமாகவும், இந்தியாவின் நிலைத்த கலாசார விழிப்புணா்வின் பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது என தெரிவித்தாா்.

Advertisement