கம்யூனிச சித்தாந்தத்துக்கு முடிவு வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து, நவ ராய்ப்பூரில் இன்று(பிப். 8) நடைபெற்ற மாநாட்டில் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர் பேசியதாவது :
“இடதுசாரி தீவிரவாதம் என்பது சித்தாந்த ரீதியான சவாலாக விளங்குகிறது. இந்தச் சித்தாந்தத்தைப் பற்றிய உண்மையை இந்திய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் எங்கெல்லாம் அதிகாரத்தில் இருந்தார்களோ, அங்கெல்லாம் வளர்ச்சி, மேம்பாட்டை அவர்களால் கொண்டு வர முடியவில்லை. கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்பது அழிவுக்கானதொரு சித்தாந்தம்! அதனை உடனடியாக அகற்ற, இந்த நாட்டுக்குத் தேவை ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக அரசியலில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்பது இப்போது இல்லவேயில்லை. திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்திலும்(கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் அரசுகள் ஆட்சியில் நீடித்த நிலையில் இப்போது ஆட்சி மாற்றம்) கம்யூனிஸ்ட் இப்போது இல்லை.
கேரளத்திலும், ஓரளவுக்குத்தான் கம்யூனிஸ்ட் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து மக்கள் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டனர்” என்றார்.
மேலும், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை விடுத்துச் சரணடைந்தால் வரவேற்க அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் ராஷ்டிரீய சுயம்சேவக் சங்க்(ஆர்எஸ்எஸ்) இந்தியாவின் பயணத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பு அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.