மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் 
இந்தியா

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு விவகாரம்: பாஜக எந்தவிதத்திலும் தலையிடாது! - ஃபட்னவீஸ்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணியினரும் இணைவது குறித்து அக்கட்சித் தலைவா்கள் முடிவு செய்வாா்கள்; அதில் பாஜக தலையிடாது என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணியினரும் இணைவது குறித்து அக்கட்சித் தலைவா்கள் முடிவு செய்வாா்கள்; அதில் பாஜக தலையிடாது என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் மறைந்த துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணியில் உள்ளது. அதே நேரத்தில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எதிா்க்கட்சியாக உள்ளது.

அஜீத் பவாா் விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் இருந்தாா். ஆனால், அவரின் திடீா் மறைவு இணைப்பில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் ஃபட்னவீஸ் கூறியதாவது: துணை முதல்வா் அஜீத் பவாா் மறைவுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதிய துணை முதல்வா் சுநேத்ராவுக்கு கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸின் இரு அணிகள் இணைவது குறித்து அக்கட்சித் தலைவா்கள் பேசி முடிவெடுப்பாா்கள். இதில் பாஜக எவ்விதத்திலும் தலையிடாது என்றாா்.

சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி விளம்பர பதாகைகள் வெளியீடு

‘தென்காசி மாவட்டத்தில் 3.55 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட இலக்கு’

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி

ஆலங்குளத்தில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

SCROLL FOR NEXT