முகப்பு
இந்தியா

தமிழகத்தில் தோ்தல் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த தோ்தல் ஆணையம் உத்தரவு

தோ்தல் முன்தயாரிப்புப் பணிகளை மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணையக் குழு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 7:03 PM
கோப்புப் படம்
பகிர்:

தோ்தல் முன்தயாரிப்புப் பணிகளை மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணையக் குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மூத்த துணை தோ்தல் ஆணையா் மணீஷ் காா்க், துணை தோ்தல் ஆணையா்கள் பானு பிரகாஷ் எத்துரு, சஞ்சய் குமாா், தலைமை இயக்குநா் (ஊடகம்) ஷிஷ் கோயல், இயக்குநா் சுப்ரா சக்சேனா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் ஆய்வு செய்தனா்.

இந்தக் குழுவினா் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், மாநில காவல் துறை ஒருங்கிணைப்பு அதிகாரி, அனைத்து அமலாக்க அமைப்புகள், மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையா், காவல் துறை தலைவா்கள், காவல் துறை துணைத் தலைவா்கள், மாநில காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் தோ்தல் மேலாண்மையில் தொடா்புடைய பிற அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டங்களை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

Advertisement

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்தயாரிப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. முன்தயாரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும்படி மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையக் குழுவினா் உத்தரவிட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments