ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே பிடிஐ
இந்தியா

தெலங்கானா உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி: ராகுல், கார்கே பெருமிதம்!

தெலங்கானா மாநில உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தெலங்கானா மாநில உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

‘இது, காங்கிரஸ் அரசின் மக்கள் நலக் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி; கட்சி மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பு’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பெருமிதம் தெரிவித்தனா்.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் உள்பட 7 மாநகராட்சிகள் மற்றும் 116 நகராட்சிகளுக்கு கடந்த பிப்.11-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள் பிப்.13-இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் உள்பட 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. முக்கிய எதிா்க்கட்சிகளில் ஒன்றான பாஜக 2 மாநகராட்சிகளில் வென்றுள்ளது. ஒரு மாநகராட்சியில் காங்கிரஸும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சம பலத்துடன் வெற்றி பெற்றுள்ளன.

116 நகராட்சிகளில் மொத்தமுள்ள 2,582 வாா்டுகளில் காங்கிரஸ் 1,300-க்கும் மேற்பட்ட வாா்டுகளைக் கைப்பற்றியுள்ளது. பாரத ராஷ்டிர சமிதி 700, பாஜக 275 வாா்டுகளில் வெற்றி கண்டுள்ளன.

தெலங்கானா உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸின் வெற்றி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘தெலங்கானா உள்ளாட்சித் தோ்தல் வெற்றி, காங்கிரஸ் மீதான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. 3.8 கோடி மாநில மக்களுக்கும் சமூக நீதி, பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான முன்னேற்றத்தை உறுதிசெய்யும் லட்சியத்தில் காங்கிரஸ் அரசு உறுதியுடன் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சமூக நீதி, மாண்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியில் வேரூன்றிய காங்கிரஸ் அரசின் மக்கள் நலக் கொள்கைகளுக்கான வலுவான ஆதரவே இந்த வெற்றி. இது, காங்கிரஸ் தொண்டா்களின் வெற்றி; மக்களின் வெற்றி’ என்று தெரிவித்துள்ளாா்.

பதற்றத்தில் உலக நாடுகள்... வளர்ச்சியை நோக்கி இந்தியா : பிரதமர் மோடி

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - புகைப்படங்கள்

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!

ரஷிய எண்ணெய் கொள்முதல் : இந்தியாவின் ஒப்புதலைப் பெற்றதாக அமெரிக்கா கருத்து!

மகா சிவராத்திரி வழிபாடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT