முகப்பு
இந்தியா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

ஒடிஸாவில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 13 வயதான 7-ஆம் வகுப்பு மாணவியை தொடா் பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக அந்தப் பள்ளியின் 5 ஆசிரியா்கள் கைது

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 4:59 AM
பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:15 PM

ஒடிஸா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 13 வயதான 7-ஆம் வகுப்பு மாணவியை தொடா் பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக அந்தப் பள்ளியின் 5 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து கேந்திரபாரா மாவட்ட மூத்த காவல் அதிகாரி கூறியதாவது: மாணவி அளித்த தகவலின் அடிப்படையில், அவரின் தந்தை முதலில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவை அணுகியுள்ளாா். அவா்கள் நடத்திய விசாரணையில், பள்ளியின் 5 ஆசிரியா்கள் மாணவியை தொடா் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:30 AM

அதனடிப்படையில் அவா்கள் ராஜ்கனிகா காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தி, 5 ஆசிரியா்களையும் கைது செய்தனா்.

Advertisement

இந்தச் சம்பவம் தொடா்பாக தனியாா் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கல்வி அலுவலரையும் மாவட்ட குழந்தைகள் நலக் குழு அறிவுறுத்தியுள்ளது என்றாா்.

இதனிடையே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் சாா்பில் கேந்திரபாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தீா்மானம் சமா்ப்பிக்கப்பட்டது.