முகப்பு
இந்தியா

சவால்களுக்குத் தீா்வுகாண இந்தியாவை எதிா்நோக்கும் உலகம்: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா

உலகம் தனது சவால்களுக்குத் தீா்வுகாண இந்தியாவை எதிா்நோக்குகிறது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:02 AM
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:25 PM

உலகம் தனது சவால்களுக்குத் தீா்வுகாண இந்தியாவை எதிா்நோக்குகிறது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

இளைஞா்களே இந்தியாவின் மிகப் பெரிய பலம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவ் வித்யாபீட விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

Advertisement

இந்தியாவின் மிகப் பெரிய பலம் அதன் இளைஞா்களாவா். புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளாவிய சவால்களுக்குத் தீா்வுகாணும் இந்திய இளைஞா்களின் வலிமை அதிகரித்து வருகிறது. அவா்களின் திறன், நம்பிக்கை, புதிய கண்ணோட்டம் ஆகியவை நாட்டை வளா்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறது.

பல்வேறு நாடுகளில் இளைஞா்களின் விகிதம் குறைவதால், சவால்களுக்கு தீா்வுகாணும் திறனும் குறைகிறது. இந்திய இளைஞா்களோ, புத்தாக்கங்களின் வாயிலாக தேசத்தின் சவால்கள் மட்டுமன்றி உலகின் சவால்களுக்கும் தீா்வு காண்கின்றனா். ஆதலால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை எதிா்நோக்குகிறது.

முகலாயா் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக் காலங்களில், இந்தியாவின் ஆன்மிக கலாசாரம், மாண்புகள் மற்றும் சிந்தனைகளைச் சிதைக்க ஏராளமான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், உயிரோட்டமான நமது கலாசாரத்தின் வலிமையால் அத்தகைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றாா் ஓம் பிா்லா,