முகப்பு
இந்தியா

கொல்கத்தாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மமதா புதிய அறிவிப்பு!

கொல்கத்தா காவல்துறையில் இரண்டு புதிய அறிவிப்புகள் பற்றி..

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:50 PM
மமதா - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:54 AM

மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் மேம்படுத்தும் நோக்கில் கொல்கத்தா காவல்துறையில் இரண்டு புதிய அறிவிப்புகளை அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க அனைத்து மகளிர் "பிங்க் பூத்கள்" முக்கிய நகரச் சந்திப்புகளில் அமைக்கப்படும் என்றும், அதன் நிலையங்கள் மாலை முதல் நள்ளிரவு வரை செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:53 PM

நகரத்தில் உள்ள எனது சகோதரிகள் இந்த பாதுகாப்புச் சாவடிகளில் உதவி தேவைப்படும் பட்சத்தில் கொல்கத்தா காவல்நிலையத்தில் உள்ள பெண் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும்

சைனிங் என்ற பெயரிட்ட அனைத்து மகளிர் மொபைல் ரோந்து குழுக்கள் நிறுத்தப்படும். இந்த குழுக்கள் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பணியில் இருக்கும். இஎம் பைபாஸ் மற்றும் இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்கள் அடிக்கடி பயன்படுத்தும் பிற முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

கொல்கத்தா பல ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பான நகரமாகத் தொடர்கிறது. பெருநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இரண்டு தனித்துவமான புதிய முயற்சிகள் மேலும் வலுசேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதல்வர் மமதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

West Bengal Chief Minister Mamata Banerjee on Saturday announced the launch of two new initiatives by Kolkata Police aimed at further enhancing women's safety and confidence in the city.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.