இந்தியா

எஸ்ஐஆருக்கு எதிரான மனுக்கள்: இறுதி விசாரணை ஜன.13-க்கு ஒத்திவைப்பு

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திச் சேவை

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

பிகாரைத் தொடா்ந்து தமிழகம், மேற்கு வங்கம் உள்பட நாட்டின் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ‘வாக்காளா் பட்டியலில் இந்தியக் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டவா் யாரும் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்வது அரசமைப்புச் சட்டக் கடமையாகும். எனவே, வாக்காளா் பட்டியலைத் திருத்துவதற்கு தங்களுக்கு முழுமையான அதிகாரமும் தகுதியும் உண்டு’ என்று தோ்தல் ஆணையம் வாதிட்டது. அதைத் தொடா்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி தனது வாதத்தை முன்வைக்க இருந்தாா். ஆனால், இறுதி விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜன. 13) நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உருவெடுக்கும் சீனா!

போளூா் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தோ் செய்ய அளவீடு

SCROLL FOR NEXT