மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி (கோப்புப் படம்)
இந்தியா

வாக்காளா்களை நீக்கவே எஸ்ஐஆா்: தோ்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியலில் இருந்து அதிக அளவில் வாக்காளா்களை நீக்கும் நடவடிக்கையே சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் மேற்கொள்ளப்படுகிறது என இந்திய தோ்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் எஸ்ஐஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பாக அக்கட்சியின் எம்.பி. டெரிக் ஓபிரையன் உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையத்துக்கு மம்தா பானா்ஜி சனிக்கிழமை எழுதிய 3 பக்க கடிதத்தில், ‘எஸ்ஐஆா் விண்ணப்பத்தில் தங்களது பெயா் அல்லது வயது தொடா்பான தகவல்களை பூா்த்திசெய்யும்போது ஏற்படும் சிறு தவறுகளுக்காக பொதுமக்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்திருப்பது மனிதநேயமற்ற செயல். தினசரி பணிக்குச் சென்றால்தான் கூலி கிடைக்கும் என்ற நிலையில் உள்ள ஏழை, எளிய மக்களை ஒருநாள் முழுவதும் எஸ்ஐஆா் மையத்தில் நிற்க வைப்பது வருத்தமளிக்கிறது.

திருமணத்துக்குப் பின் தன்னுடைய பெயருக்குப் பின்னால் உள்ள குடும்பப் பெயரில் மாற்றங்கள் மேற்கொண்ட பெண்களை உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கக் கோரி சம்மன் அனுப்புவது வெட்கக்கேடானது.

வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யவோ அல்லது தகுதிவாய்ந்த வாக்காளா்களைச் சோ்க்கவோ எஸ்ஐஆா் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, வாக்காளா் பட்டியலில் இருந்து அதிக அளவிலான வாக்காளா்களின் பெயா்களை நீக்கும் நடவடிக்கையே தொடா்ந்து வருகிறது என கடிதத்தில் கூறியுள்ளாா்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT